ஐஸ்வர்யா ராஜேஷிடம் தவறாக நடந்த போட்டோகிராபர்.. அதிர்ச்சி புகார் கூறிய நடிகை
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர். அவரது எதார்த்தமான நடிப்புக்கு சினிமா ரசிகர்களை கவர்ந்த ஒன்று.
கடந்த சில வருடங்களாக அவர் ஹீரோயின் சென்ட்ரிக் கதைகளாக தேர்வு செய்து நடித்து வந்தார். ஆனால் பெரிய அளவில் ஹிட் கொடுக்க முடியாததால் தற்போது பட வாய்ப்புகளும் அவருக்கு குறைந்திருக்கிறது.

போட்டோகிராபர் பற்றி புகார்
ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது அளித்த பேட்டியில் தான் கெரியரின் ஆரம்பகட்டத்தில் இருந்தபோது ஒரு போட்டோகிராபரை சந்திக்க போனதாகவும், அப்போது அவர் தன்னிடம் கேட்ட விஷயம் அதிர்ச்சி கொடுத்ததாக தெரிவித்து இருக்கிறார்.
"என் சகோதரர் உடன் தான் சென்று இருந்தேன். அவரை வெளியே உட்கார வைத்துவிட்டு, என்னை மட்டும் உள்ளே அழைத்து சென்றார். உள்ளாடை ஒன்றை கொடுத்து அதை அணியும்படி கூறினார். நான் உன் உடலை பார்க்க விரும்புகிறேன் என சொன்னார்."
"அந்த வயதில் சினிமா துறை எப்படி வேலை செய்கிறது என்கிற அறிவு எனக்கு இல்லை. இங்கு இப்படித்தான் போல என நான் நினைத்துக்கொண்டேன். அவர் இன்னும் ஒரு ஐந்து நிமிடம் பேசி இருந்தால், நான் அவர் சொன்னதை செய்துவிட்டிருப்பேன். ஆனால் ஒரு பக்கம் சந்தேகமும் வந்தது. என் சகோதரர் அனுமதி வேண்டும் என சொல்லி அந்த அறையில் இருந்து வெளியில் வந்துவிட்டேன். அங்கு நடந்ததை பற்றி என் சகோதரரிடம் கூறவே இல்லை" என ஐஸ்வர்யா ராஜேஷ் கூறி இருக்கிறார்.
இருப்பினும் அந்த போட்டோகிராபர் பெயரை அவர் கூறவில்லை.
