டீசரை வைத்து முடிவு பண்ணக்கூடாது.. ஃபர்ஹானா பட சர்ச்சை குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்
தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களை தேர்வு செய்து நடித்து வருபவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது இவர் நடிப்பில் ஃபர்ஹானா என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. அந்த டீசரில் சில இஸ்லாம் மதத்தை தவறாக சித்தரித்துள்ளதாக பல கருத்துக்கள் எழுந்தது.
இந்நிலையில் இது குறித்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், ஃபர்ஹானா திரைப்படம் இஸ்லாம் மதத்திற்கு எதிரான படம் இல்லை. இப்படம் இஸ்லாமிய நண்பர்களுடன் சேர்ந்து பார்க்கும் வகையில் தான் இருக்கும்.
இந்த படத்தில் சர்ச்சைக்குரியவகையில் கருத்துக்கள் எதுவும் வரவில்லை. படத்தின் டீசரை வைத்து முடிவு பண்ணக்கூடாது என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.

மறுபக்கத்தை காட்டிய ரம்யா பாண்டியன்.. வியந்து போன ரசிகர்கள்
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri