இந்த போட்டோவில் டீனேஜில் இருக்கும் நடிகை யார் தெரியுமா? கோலிவுட்டின் முக்கிய நடிகை
ஐஸ்வர்யா ராஜேஷ்
ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடிப்பது மட்டுமின்றி, வுமன் சென்ட்ரிக் படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது அவர் ஃபர்ஹானா என்ற படத்தில் இஸ்லாமிய பெண்ணாக நடித்து வருகிறார். அதில் அவர் மூன்று குழந்தைகளுக்கு தாயாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஹோம்லியாக மட்டுமே நடித்து வந்த நிலையில் சமீப காலமாக சற்று க்ளாமராகவும் நடித்து வருகிறார்.

இளம் வயது போட்டோ
பல நடிகர் நடிகைகளின் சின்ன வயது போட்டோவை பார்த்தால், அவர்களா இது என கேள்வி கேட்கும் அளவுக்கு அவர்களின் தோற்றம் தற்போது அப்படியே மாறி இருக்கும்.
அப்படிப்பட்ட ஒரு போட்டோவை தான் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டு இருக்கிறார். டீனேஜில் இருக்கும் அவரது போட்டோவை பதிவிட்டு 'அப்போது என்ன வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் என guess பண்ணுங்க' என கேட்டிருக்கிறார் அவர்.
வைரலாகும் அந்த போட்டோ இதோ