இயக்குனர் செல்வராகவனை முறை சொல்லி பாராட்டிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் !
தனுஷ் - ஐஸ்வர்யா
ரஜினி மகள் ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தனுஷ் இருவரும் காதலித்து 2004 நவம்பர் 18ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் சமீபத்தில் அவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.
விவாகரத்து அறிவித்துவிட்டு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்கள் கெரியரில் பிஸியாகிவிட்டனர். தனுஷ் வாத்தி என்ற bilingual படத்தில் நடித்து வருகிறார். மறுபுறம் ஐஸ்வர்யா பயணி என்ற பாடலை இயக்கி வந்தார்.

செல்வராகவன் புகைப்படத்திற்கு ஐஸ்வர்யாவின் ரியாக்ஷன்
இதனிடையே சமீபத்தில் ஐஸ்வர்யா இயக்குனரும் தனுஷின் சகோதரருமான செல்வராகவன் பிறந்தநாள் அன்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்து இருந்தார்.
மேலும் தற்போது இயக்குனர் செல்வராகவன் சாணிக்காயிதம் படத்தின் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். அதற்கு ஐஸ்வர்யா "வாவ்...செல்வா அத்தான்..." என பாராட்டி பதிவிட்டு இருந்தார்.

சிம்புவுடன் இணையும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. எதிர்பார்க்காத ஒன்று