இதுவரை எனக்கு அந்த பீலிங்கே இல்லை, தனிமை தான்... ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓபன் டாக்
ஐஸ்வர்யா
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் என்ற அடையாளத்துடன் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
தனுஷ்-ஸ்ருதிஹாசனை வைத்து 3 என்ற படம் இயக்கி ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் அடுத்து கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை படம் இயக்கினார், ஆனால் சரியாக ஓடவில்லை.
பின் சினிமா வீரன் என்ற ஆவணப்படம் எடுத்தார், கடைசியாக விக்ராந்த், விஷ்ணு விஷால், ரஜினிகாந்த் வைத்து லால் சலாம் என்ற படம் இயக்கினார். இயக்குனர் என்பதை தாண்டி டப்பிங் கலைஞராகவும் தன்னை நிரூபித்துள்ளார்.
பழைய பேட்டி
தற்போது நடிகர் தனுஷை விவாகரத்து செய்து தனியாக இருக்கும் ஐஸ்வர்யா இதற்கு முன் வாழ்க்கை குறித்து கொடுத்த பேட்டி வைரலாகி வருகிறது. அதில் அவர், வாழ்க்கையின் தத்துவத்தை கடந்த 2, 3 ஆண்டுகளின் நான் கற்றுக் கொண்டேன்.
தனிமை எனக்கு மிகவும் பிடித்த விஷயமாக இருக்கிறது, அந்த தனிமையை நான் விரும்புகிறேன். நான் புரிந்துகொண்ட மற்றொரு விஷயம் என்னவென்றால் தனிமையில் இருக்கும் ஓருவர்தான் வாழ்க்கையில் மிகவும் பாதுகாப்பான நபராக இருக்கிறார்.
Bore அடித்தால் என்ன செய்வீர்கள் என கேட்கிறார்கள், முதலில் எனக்கு அப்படி தோன்றியது கிடையாது, இதனால் எனக்கு அந்த பீலிங்கே வந்தது இல்லை என பேட்டி கொடுத்துள்ளார்.

இமயமலையால் அடித்த ஜாக்பாட்.. பாகிஸ்தானில் தங்கச் சுரங்கம்- கோடிக்கணக்கில் கிடைக்க போகுது! IBC Tamilnadu

குழந்தையின் டயப்பர், சிந்திய சிறுநீர் பை; விமானத்தில் அருவருப்பு விஷயம் - பணிப்பெண் ஆதங்கம் IBC Tamilnadu
