அஜித்தை மறைமுகமாக தாக்கிய கோப்ரா இயக்குனர்! இப்படி சொல்லிட்டாரே
கோப்ரா பட இயக்குனரை அஜய் ஞானமுத்து ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.
கோப்ரா
தற்போது விக்ரம் நடிப்பில் ரிலீஸ் ஆகி இருக்கும் கோப்ரா படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் தான் கிடைத்து வருகிறது. அதனால் படத்தின் வசூலும் அதிகம் குறைந்திருக்கிறது. படத்தின் நீளம் பற்றி விமர்சனம் வந்ததால் நீளத்தை தற்போது 20 நிமிடங்கள் குறைத்து இருக்கிறார்கள்.
ஐந்து நாட்களில் கோப்ரா படம் 28 கோடி தான் தமிழ்நாட்டில் வசூல் செய்து இருக்கிறது. அதனால் படம் தோல்வியை தவிர்க்க இன்னும் மிகப்பெரிய வசூல் ஈட்டவேண்டி இருக்கிறது.
மங்காத்தா படத்தை மறைமுகமாக தாக்கி பேசிய அஜய் ஞானமுத்து
இந்நிலையில் கோப்ரா படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து இன்ஸ்டாகிராமில் விமர்சனங்களுக்கு கோபத்தில் அளித்து இருக்கிறார். படத்தின் கிளைமாக்ஸ் தான் மோசமாக இருந்தது என ஒருவர் விமர்சித்து இருந்த நிலையில் அவர் மங்காத்தா பட கிளைமாக்ஸ்ஸை குறிப்பிட்டு பதில் கூறி இருக்கிறார்.
"கிளைமாக்சில் ஹீரோ தப்பித்து வெளிநாட்டில் சுதந்திரமாக நடமாடி கொண்டிருக்கிறார் என மாஸ் பிஜிஎம் எல்லாம் போட்டு காப்பாற்றி இருக்க வேண்டும். ஆனால் ethically மிகப்பெரிய குற்றங்கள் செய்த அந்த கதாபாத்திரத்தை சுதந்திரமாக விடுவது சரியா?" என கேட்டிருக்கிறார்.
அஜித் நடித்த மங்காத்தா கிளைமாக்ஸை தான் அஜய் ஞானமுத்து மறைமுகமாக இப்படி ட்ரோல் செய்திருக்கிறார்.


திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
