ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து அஜித்தையும் இயக்கும் நெல்சன்? முதல் முறையாக இணையும் மாஸ் கூட்டணி
நெல்சன் திலீப்குமார்
கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குனராக என்ட்ரி கொடுத்தவர் நெல்சன் திலீப்குமார். இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்து டாக்டர் எனும் வெற்றிப்படத்தை கொடுத்தார்.

இதன்பின் தளபதி விஜய்யுடன் இணைந்த நெல்சன் பீஸ்ட் படத்தை இயக்கினார். இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை. ஆனாலும், தற்போது ஜெயிலர் படத்தை சூப்பர்ஹிட்டாக்கி கம் பேக் கொடுத்துள்ளார்.
லேட்டஸ்ட் அப்டேட்
இந்நிலையில், ஜெயிலர் படத்திற்கு பின் நெல்சன் யாரை வைத்து படம் இயக்க போகிறார் என தகவல் வெளியாகவில்லை. ஆனால், தற்போது லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, அஜித் நடிப்பில் விடாமுயற்சி படத்திற்கு உருவாகவிருக்கும் அஜித் 63 படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க திட்டமிட்டுள்ளார்களாம். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகிறதா என்று.
வாலி அஜித் போல் உடல் எடையை குறைத்த அஜித்.. புகைப்படத்தை பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க