மோதிக்கொள்ளும் துணிவு, வாரிசு! 'விஜய்யும் நானும் எதிரி கிடையாது'.. நடிகர் அஜித் அதிரடி பேட்டி
துணிவு - வாரிசு
அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு ஆகிய இரு திரைப்படங்களும் வருகிற பொங்கலுக்கு வெளியாகிறது.
இதில் எந்த படம் வெற்றியடையும் என்று தற்போதே ரசிகர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுவிட்டது.

இரு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகவில்லை என்றாலும், சமூக வலைதளத்தில் எப்போதும் இந்த கூச்சலும், சலசலப்பும் இருந்துகொண்டே தான் இருக்கிறது.
அஜித் - விஜய்யும் எதிரெதிர் துருவங்கள் என்று எண்ணி அவருடைய ரசிகர்கள் இந்த மாதிரியான விஷயங்களை சமூக வலைத்தளங்களில் செய்து வருகிறார்கள்.
அஜித் பேட்டி
இந்நிலையில், அஜித் - விஜய் இந்த சலசலப்பின் சர்ச்சைக்கு குறித்து சில ஆண்டுகளுக்கு முன் தான் அளித்த பேட்டி ஒன்றில் அஜித் கூறியுள்ளார்.
இதில், நாங்கள் இருவரும் எதிரிகள் இல்லை என்றும், ஆனால் எங்களுக்கு போட்டி, பொறாமை எல்லாம் இருக்கிறது என்றும் கூறியுள்ளார். அஜித் பேசியுள்ள இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
