குட் பேட் அக்லி பட வெற்றிக் குறித்து அஜித் சொன்ன ஒரே விஷயம்.. ஆதிக் பேட்டி
குட் பேட் அக்லி
தமிழ் சினிமாவில் செம மாஸாக கெத்தாக ரசிகர்களின் அலைமோதும் கூட்டத்திற்கு நடுவில் ஒளிபரப்பாகி வருகிறது குட் பேட் அக்லி.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் தயாராக இதில் அஜித், த்ரிஷா, அர்ஜுன் தாஸ் என பலர் நடித்துள்ளனர். சிறப்பு வேடத்தில் சிம்ரன், பிரியா வாரியர் என ஸ்பெஷலாக பார்க்க வேண்டிய விஷயங்கள் இதில் உள்ளது.
கேங்ஸ்டராக அஜித் செம மாஸ் காட்டி நடித்துள்ளார், ரசிகர்கள் படத்தை கொண்டாடி வர அவரோ தனது கார் ரேஸில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.
ஆதிக் பேச்சு
பட ரிலீஸிற்கு பிறகு அஜித் அவர்களிடம் ஆதிக் ரவிச்சந்திரன் பேசியுள்ளார். அப்போது அஜித், ஓகே படம் ஹிட் ஆகிடுச்சு, படம் பிளாக் பஸ்டர் ஆனது.
அவ்வளவுதான் அதை மறந்துவிடு, வெற்றியை உன் தலையில் ஏற்றிக்கொள்ளாதே, அதேபோல் தோல்வியை உன் வீட்டுக்கு எடுத்துச் செல்லாதே. எல்லாத்தையும் விட்டுட்டு அடுத்த வேலையை பாரு என்று சொன்னாராம்.
இதனை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.