எனக்கு தமிழ் சரியா பேச தெரியாது.. நடிகர் அஜித் ஓபன் டாக்
அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் அஜித் குமார், ஒரு பக்கம் சினிமா மறுபக்கம் கார் ரேஸ் என பிஸியாக இருக்கிறார்.

குட் பேட் அக்லி படத்திற்கு பின் அஜித் நடிக்கவிருக்கும் AK 64 படத்தின் அறிவிப்பிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரியில் இருந்து துவங்கும் என கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓபன் டாக்
சமீபத்தில் அஜித் அளித்த பேட்டி இணையத்தில் படுவைரலானது. இதில் சினிமா, கார் ரேஸ், வாழ்க்கை, ரசிகர்கள், அரசியல் என பல விஷயங்களை அஜித் பேசினார். இதில் கரூர் துயர சம்பவம் குறித்து அவர் பேசியது முக்கியமாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில், தன்னால் தமிழ் சரியாக பேச முடியாமல் இருந்த காலகட்டம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

இதில், "முதலில் எனக்கு சரியா தமிழ் பேச தெரியாது. உச்சரிப்பில் நிறைய வித்தியாசம் இருந்துச்சு. அத சரி பண்ண நான் கடுமையா உழைச்சேன். நான் சினிமாவுக்கு வந்த புதுசுல, என் பேர மாத்திக்க சொன்னாங்க. ஆனா வேற எந்த பேரும் வேணாம்னு நான் உறுதியா சொல்லிட்டேன். கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் நான் பல சவால்களை கடந்து வந்தேன்" என கூறினார்.