கஜினி படத்தில் அஜித், அசின் நடித்த காட்சிகள்.. புகைப்படத்துடன் இதோ
கஜினி
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்து 2005ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் கஜினி. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து அசின் ஜோடியாக நடித்திருப்பார்.
வித்தியசமான கதைக்களத்தில் உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்தது. இன்று வரை சூர்யாவின் சிறந்த நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
அஜித் நடித்த காட்சிகள்
ஆனால், இப்படத்தில் முதன் முதலில் சஞ்சய் ராமசாமி கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது சூர்யா கிடையாது. ஏ.ஆர். முருகதாஸ் இப்படத்தை முதன் முதலில் அஜித்தை வைத்து தான் இயக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி, அஜித் - அசின் இருவரையும் வைத்து போட்டோஷூட் நடத்தி சில காட்சிகளை எடுத்துள்ளார்.
மேலும் இப்படத்திற்கு முதலில் மிரட்டல் என்று தான் தலைப்பு வைக்கப்பட்டதாம். ஆனால், சில காரணங்களால் படத்திலிருந்து அஜித் வெளியேற, அவருக்கு பதிலாக சூர்யா ஹீரோவாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.
அதன்பின் படத்தின் தலைப்பு கஜினி என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்கின்றனர். அஜித் - அசின் இருவரும் கஜினி படத்திற்காக நடத்தி காட்சியின் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள்..
You May Like This Video






இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
