லட்ச கணக்கில் சம்பளம் வாங்கி நடித்த விஜய், ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் நடித்த அஜித்
அஜித் - விஜய்
வாரிசு மற்றும் துணிவு இரு திரைப்படங்களும் வருகிற 11ஆம் தேதி வெளியாகிறது.
ஆனால், இந்த இரு திரைப்படங்களும் வெளியாவதற்கு முன் அஜித் - விஜய் இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலே படத்தை ரீ ரிலீஸ் செய்கிறார்கள்.

அஜித் மற்றும் விஜய் இணைந்து நடித்த ஒரே ஒரு திரைப்படம் தான் ராஜாவின் பார்வையிலே. இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் விஜய் ரூ. 3 லட்சம் சம்பளமாக வாங்கினாராம்.
சம்பளம் வாங்காத அஜித்
ஆனால், விஜய்யின் சமகால போட்டி நடிகரான அஜித், அப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்க ஒரு ரூபாய் கூட சம்பளமாக வாங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் இடம்பெறும் முக்கிய காட்சிகளில் நடித்திருந்த அஜித் சம்பளமே வாங்காமல் நடித்தது பெரும் ஆச்சிரியம் தான் என கூறப்படுகிறது.
துணிவு படம் இந்த 5 தமிழ் திரைப்படங்களின் காப்பியா.. இந்த முறையும் சொதப்பல் தானா