மீண்டும் வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் அஜித்.. 10 வருடத்திற்கு பின் எடுத்துள்ள முடிவு
விடாமுயற்சி
அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமணி இயக்கிவரும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ், பிரியா பவானி ஷங்கர் என பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்.
அனிருத் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு அசர்பைஜானில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது பிரேக் விட்டுள்ளனர். இதனால் படக்குழு அனைவரும் தற்போது சென்னைக்கு திரும்பி வந்துள்ளனர். மீண்டும் 5 நாட்களுக்கு பின் துபாய் செல்வார்கள் என கூறப்படுகிறது.
விடாமுயற்சி படத்திற்கு பின் அஜித் முதல் முறையாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்காக நடிகர் அஜித்துக்கு ரூ. 162 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். ஆனால், இப்படம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை.
மீண்டும் வெற்றி கூட்டணி
இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் குறித்து தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி, இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கப்போவதாக தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே வீரம் படத்தின் மூலம் வெற்றி கூட்டணி என நிரூபித்த அஜித் - டிஸ்பி கூட்டணி தற்போது மீண்டும் 10 ஆண்டுகள் கழித்து ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் இணையவுள்ளனர். பொறுத்திருந்து பார்ப்போம் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri
