அஜித் எடுத்த அதிரடி முடிவு.. உச்சக்கட்ட கோபத்தில் ரசிகர்கள்

By Kathick Mar 15, 2026 09:50 AM GMT
Report

AK 64

நடிகர் அஜித்தின் AK 64 திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்றுதான் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஸ்ரீலீலா நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளிவந்தது. மேலும், அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார் என கூறப்பட்டது.

அஜித் எடுத்த அதிரடி முடிவு.. உச்சக்கட்ட கோபத்தில் ரசிகர்கள் | Ajith Ak 64 Movie Will Not Have Shooting This Year

இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கும் என இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறியிருந்த நிலையில், அது நடக்கவில்லை. படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை. இது அஜித் ரசிகர்களுக்கு கடும் வருத்தத்தை கொடுத்தது.

கோபத்தில் ரசிகர்கள்

இந்த நிலையில், 2027ஆம் ஆண்டு வரை அஜித் எந்த திரைப்படத்திலும் நடிக்கப்போவதில்லை என தெரிய வந்துள்ளது. காரணம், 2026 மார்ச் மாதம் முதல் 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை பல்வேறு நாடுகளில் அஜித் குமார் கார் ரேஸில் கலந்துகொள்ளவுள்ளார்.

அஜித் எடுத்த அதிரடி முடிவு.. உச்சக்கட்ட கோபத்தில் ரசிகர்கள் | Ajith Ak 64 Movie Will Not Have Shooting This Year

இதனால் இந்த ஆண்டு AK 64 படத்தின் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்பில்லை என தெரிகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் உச்சகட்ட கோபத்தில் உள்ளனர். ஆனால், அஜித்தின் கார் ரேஸிங் ஆவணப்படம் இந்த ஆண்டு வெளிவர அதிக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US