மகன் ஆத்விக்குடன் அஜித்குமார் - ஷாலினி தம்பதி!.. வைரலாகும் புகைப்படம்
அஜித்
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் அஜித் குமார். தற்போது இவர் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் முடித்துவிட்ட படக்குழு, அடுத்து துபாயில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளதாம்.
இதற்கிடையில் 5 நாட்கள் பிரேக் எடுத்து சென்னை திரும்பியுள்ளார் அஜித் குமார். அவர் சென்னை திரும்பிய வீடியோ இரு தினங்களுக்கு முன்னர் வைரலாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
புகைப்படம்
அஜித் குமார் பைக் ரைடிங் மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தாலும், அவரது மகன் ஆத்விக் தனி ரூட்டில் சென்று கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் ஆத்விக் உடன் அஜித் மற்றும் ஷாலினி ஃபுட் பால் கிரவுண்டில் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.