ரசிகரின் செயலால் கடுப்பான அஜித்.. முகமே மாறிவிட்டது!! இணையத்தில் வைரலாகும் வீடியோ
அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் அஜித் தற்போது கார் ரேஸில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார். தொடர்ந்து ஒவ்வொரு நாட்டில் நடைபெறும் கார் பந்தயத்தில் போட்டியிட்டு, டாப் 3 இடங்களில் ஒரு இடத்தை தன்வசப்படுத்தி வருகிறார்.
ஒரு பக்கம் சினிமா மறுபக்கம் கார் ரேஸ் என அஜித் கலக்கிக்கொண்டிருந்தாலும், அவருடைய அடுத்த படத்தின் அறிவிப்பை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இம்மாதம் இறுதிக்குள் வெளிவரும் என கூறப்படுகிறது.
நடிகர் அஜித் வெளிநாட்டில் கார் ரேசிங்கில் இருக்கும்போது, அவரை சந்திக்க ரசிகர்கள் அங்கு செல்கிறார்கள். அப்போது எடுக்கப்படும் வீடியோக்கள் கூட அவ்வப்போது வெளிவருவதை நாம் பார்க்கிறோம். மோட்டார் ஸ்போர்ட்ஸை அனைவரிடமும் கொண்டு செல்லுங்கள் என அவர் கூறிய வீடியோ கூட வைரலானது.
கடுப்பான அஜித்
இந்த நிலையில், அஜித்தை சந்திக்க சென்றிருந்த ரசிகர்கள் அவரை பார்த்தவுடன், கத்தி கூச்சலிட்டனர். பின் ரசிகர் ஒருவர் விசில் அடித்தார். அவர் அப்படி செய்தவுடன் அஜித் கடுப்பாகிவிட்டார். அஜித்தின் முகமே மாறிவிட்டது.
[]
அதன்பின், விசில் அடிக்காதீர்கள் என அஜித் கைகாட்டினார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ:
🤫 #Ajith Sir 🫡 #AjithKumar #AjithKumarRacing pic.twitter.com/ZTBuYhFRzX
— AJITHKUMAR TEAM ONLINE (@AkTeamOnline) October 13, 2025