நடிகர் அஜித்தே தொலைப்பேசியில் அழைத்து தனது திரைப்படத்தை இயக்கும்படி கேட்ட இயக்குநர் ! யார் தெரியுமா?
அஜித்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் தற்போது இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் AK61 திரைப்படத்தில் நடித்து வந்தார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வங்கி கொள்ளை குறித்த திரைப்படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
இப்படத்தை தொடர்ந்து அஜித் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவரின் 62-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது.
இயக்குநர் சச்சி
மேலும் மலையாளத்தில் ஐயப்பனும் கோஷியும் திரைப்படத்தை இயக்கி பெயர் பெற்றவர் இயக்குநர் சச்சி. இவரின் ஐயப்பனும் கோஷியும் திரைப்படத்தை பார்த்துவிட்டு நடிகர் அஜித் அவருக்கு போன் போட்டு “படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உங்களுடன் ஒரு படம் செய்ய வேண்டும்.
அதுபற்றிப் பேச நான் கொச்சி வரட்டுமா?” என கேட்டாராம். அதற்கு சச்சி “வேண்டாம், ஆபரேஷன் செய்துகொண்டபின் நான் சென்னையில் வந்து பார்க்கிறேன்” என அஜித்திடம் சொல்லியுள்ளார்.
ஆனால் சச்சியின் திடீர் மரணத்தால், அந்த சந்திப்பு நடக்காமலே போயிற்று என சச்சி மனைவி முன்பு தெரிவித்து இருந்தார். 4 தேசிய விருதுகளை அள்ளிய ஐயப்பனும் கோஷியும் திரைப்பட இயக்குநர் சச்சி கடந்த 2020 ஆம் ஆண்டு மரணமடைந்தார். அவரின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகிற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வெளியானது ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 6 ப்ரோமோ