நடிகர் அஜித் பிராட் பிட்டை விட பெரிய நட்சத்திரமாக இருக்கக்கூடும்.. ஆச்சரியத்தில் வர்ணனையாளர்
கார் ரேஸில் அஜித்
நேற்று மதியம் 1 மணிக்கு துபாயில் 24 மணி நேர கார் ரேஸ் போட்டி துவங்கியது. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான அஜித் இதில் தனது குழுவுடன் பங்கேற்றார்.
ஆனால், சமீபத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக அஜித்தால் இந்த போட்டியில் தொடர முடியவில்லை. ஆனால், அவருடைய குழு இதில் போட்டியிட்டு வருகிறார்கள். 24 மணி நேரம் நடக்கும் இந்த கார் ரேஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித்துக்கு ரசிகர்கள் மத்தியில சிறந்த வரவேற்பு கிடைத்தது.
தனக்கு ஆதரவு தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தும், அவர்களை ஊக்கவிக்கும் வகையிலும் அஜித் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில், அஜித்திற்கு கிடைத்த வரவேற்பை பெற்று மிரண்டுபோன வர்ணனையாளர் ஒருவர், அஜித் குறித்து பேசியுள்ளார்.
பிட்டை விட பெரிய நட்சத்திரமாக இருக்கக்கூடும்
அவர் கூறியதாவது "அஜித்திற்கு கிடைக்கும் வரவேற்பு ஆச்சர்யமாக இருக்கிறது. இங்கு அஜித்குமாருக்கு கிடைக்கும் வரவேற்பு ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. சமீபத்தில் அமெரிக்காவின் டேடோனா ரேஸிங் சர்க்யூட்டுக்கு பிராட் பிட் வந்தபோது அவருக்கு கிடைத்த வரவேற்பைவிட, அஜித்துக்கு இங்கு அதிக வரவேற்பு உள்ளது. அஜித் தன்னுடைய இடத்தில் பிராட் பிட்டை விட பெரிய நட்சத்திரமாக இருக்கக்கூடும் என்று நினைக்கிறன்" என துபாய் ஆட்டோட்ரோம் சர்க்யூட் வர்ணனையாளர் கூறியுள்ளார்.