'என் கதைல நான்தான்டா வில்லன்'.. AK 61ல் சம்பவம் செய்ய காத்திருக்கும் எச். வினோத்
ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புக்குரிய இயக்குனர்களில் ஒருவர் எச். வினோத். இவர் இயக்கும் படங்களுக்கு என்றே தனி பார்வையாளர்களும் உண்டு.
வலிமை டு AK 61
இவருடைய இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி வெளிவந்த வலிமை படம் சற்று கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்தாலும் வசூலில் பட்டையை கிளப்பியது.

வலிமை படத்தில் விட்டதை பிடிக்க தற்போது மீண்டும் இணைந்துள்ளது அஜித் - எச். வினோத் கூட்டணி. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் துவங்கியுள்ளது.
என் கதைல நான்தான்டா வில்லன்
இந்நிலையில், இப்படத்தில் அஜித் டபுள் ஆக்ஷனில் நடிக்கிறார் என்று தெரியவந்துள்ளது. ஹீரோவாக ஒரு கதாபாத்திரத்திலும், வில்லனாக மறு கதாபாத்திரத்திலும் அஜித் நடிக்கிறாராம்.

அதுமட்மின்றி, படத்தில் பல கெட்டப்புகளில் அஜித் வருவார் என்று தெரிவிக்கின்றனர். இதன்முலம் கண்டிப்பாக தரமான சம்பவம் காத்திருக்கிறது என்று தெளிவாக தெரிகிறது.
நடிகர் அஜித்தின் பிரம்மாண்டமான புதிய வீடு.. முதல் முறையாக வெளிவந்த புகைப்படம்