படம் தோல்வியடையும் என தெரிந்தும் நடித்த அஜித்.. காரணம் தயாரிப்பாளர் தானா
நடிகர் அஜித்
அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த துணிவு திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்கவுள்ளார்.

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கடந்த மே 1 வெளிவந்தது. ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தபடி இப்படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார். ஆனால், இதுவரை இப்படத்திற்கு யார் ஹீரோயின் என முடிவு செய்யவில்லை.
தயாரிப்பாளருக்காக ஒகே சொன்ன அஜித்
அஜித் திரைவாழ்க்கையில் இதுவரை பல வெற்றிப்படங்கள், சில தோல்விப்படங்கள் வெளிவந்தது. அப்படி அஜித் நடிப்பில் வெளிவந்து மாபெரும் தோல்வி படமாக அமைந்தது தான் ’ஜி’. இப்படத்தை லிங்குசாமி இயக்கியிருந்தார்.

இப்படத்தின் கதையை படப்பிடிப்பு செல்லும் ஒரு நாளைக்கு முன் தான் அஜித் கேட்டாராம். கதையை கேட்டு முடித்தவுடன் இப்படம் கண்டிப்பாக தோல்வி தான் என கூறினாராம் அஜித்.

ஆனால், மறைந்த தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்ரவத்தி படத்தின் கதை மீது நம்பிக்கை வைத்து அஜித்தை இப்படத்தில் நடிக்க சொன்னாராம். இதனால் தான் அஜித் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
அதே போல் ஜி படத்தில் மாதவன் தான் முதன் முதலில் நடிப்பதாக இருந்தது என்று இயக்குனர் லிங்குசாமி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணத்தின் போது மணிவண்ணன் அணிந்திருந்த கோட் சூட் யாருடையது தெரியுமா.. இதோ பாருங்க
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri