நடிகர் அஜித் நடிப்பதாக போஸ்டர் உடன் அறிவிக்கப்பட்டு பின் பாதியிலே கைவிடப்பட்ட திரைப்படங்கள்..

By Jeeva Jul 21, 2022 11:10 AM GMT
Report

பாதியிலே நிறுத்தப்பட்ட அஜித் படங்கள்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.

அந்த வகையில் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் பெரிய எதிர்பார்புடன் திரைக்கு வந்தது. மேலும் அப்படம் உலகளவில் ரூ.200 கோடிக்கும் மேல் வசூலை குவித்து சாதனை படைத்தது.

மேலும் அப்படத்தை தொடர்ந்து அஜித் மீண்டும் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படமாக உருவாகி வரும் AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் அஜித் நடிப்பில் ஏகபட்ட திரைப்படங்கள் உருவாகவிருந்து பின் பாதியிலே நிறுத்தப்பட்டது உண்டு. அப்படி அவர் நடிப்பதாக போஸ்டர்கள் எல்லாம் வெளியாகி பின் கைவிடப்பட்ட திரைப்படங்கள் குறித்து தான் பார்க்க இருக்கிறோம்.  

சாருமதி (1997)

அஜித்தால் பாதி படப்பிடிப்பில் திடீரென கைவிடப்பட்ட முதல் படம் இதுதான். ஆனால், அதற்கான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை. இப்படத்துக்கு தேவா இசையமைத்திருந்தார்.

நடிகர் அஜித் நடிப்பதாக போஸ்டர் உடன் அறிவிக்கப்பட்டு பின் பாதியிலே கைவிடப்பட்ட திரைப்படங்கள்.. | Ajith Dropped Movies List

நியூ (2000)

அஜித், ஜோதிகா ஒப்பந்தம் செய்யப்பட்டு, 2000-ஆம் ஆண்டு ஃபர்ஸ்ட் லுக் கூட வெளியிடப்பட்டு இருவரும் திடீரென விலகினர். பின் சிம்ரன் ஜோடியாக இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவே நடித்து 2004-ல் வெளியானது.

நடிகர் அஜித் நடிப்பதாக போஸ்டர் உடன் அறிவிக்கப்பட்டு பின் பாதியிலே கைவிடப்பட்ட திரைப்படங்கள்.. | Ajith Dropped Movies List

நந்தா (2001)

1999-ல் சேது வெற்றியைத் தொடர்ந்து 2001-ல் நந்தா படத்தை அறிவித்தார் இயக்குநர் பாலா. முதலில் அஜித் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில காரணத்தால் பின்னர் சூர்யா இதில் நடித்தார்.

நடிகர் அஜித் நடிப்பதாக போஸ்டர் உடன் அறிவிக்கப்பட்டு பின் பாதியிலே கைவிடப்பட்ட திரைப்படங்கள்.. | Ajith Dropped Movies List

இதிகாசம் (2001)

சிட்டிசன் வெற்றியையடுத்து சரவண சுப்பையாவுடன் மீண்டும் இணைந்தார் அஜித். வரலாற்றுப் பின்னணியில் இதிகாசம் எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இந்தப் படம் முற்றிலும் கைவிடப்பட்டது.

நடிகர் அஜித் நடிப்பதாக போஸ்டர் உடன் அறிவிக்கப்பட்டு பின் பாதியிலே கைவிடப்பட்ட திரைப்படங்கள்.. | Ajith Dropped Movies List

ஏறுமுகம் (2001)

சரணுடன் 3-ஆவது முறையாக இணைந்து, 40 சதவீத காட்சிகளும் படமாக்கப்பட்டு, கதையில் திருப்தி இல்லையென்று கூறி விலகினார் அஜித். பின்னர் விக்ரம் நடிப்பில் ஜெமினியாக வெளியாகி வெற்றிபெற்றது.

நடிகர் அஜித் நடிப்பதாக போஸ்டர் உடன் அறிவிக்கப்பட்டு பின் பாதியிலே கைவிடப்பட்ட திரைப்படங்கள்.. | Ajith Dropped Movies List

மகா (2002)

போலீஸ் அதிகாரியாக த்ரில்லர் வகையான இந்த கதையின் படப்பிடிப்பு 8 நாட்கள் நடந்தது. அப்போது அஜித் காலில் காயம் ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டு வர சில காலம் ஆகும் என்பதால் படம் கைவிடப்பட்டது.

நடிகர் அஜித் நடிப்பதாக போஸ்டர் உடன் அறிவிக்கப்பட்டு பின் பாதியிலே கைவிடப்பட்ட திரைப்படங்கள்.. | Ajith Dropped Movies List

திருடா (2004)

மருத்துவர் வேடத்தில் அஜித் பங்கேற்று சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த பின்னர் இந்தப் படமும் கைவிடப்பட்டது. பின்னர் இதே கூட்டணி ஜனா திரைப்படத்தில் இணைந்து பணியாற்றியது.

நடிகர் அஜித் நடிப்பதாக போஸ்டர் உடன் அறிவிக்கப்பட்டு பின் பாதியிலே கைவிடப்பட்ட திரைப்படங்கள்.. | Ajith Dropped Movies List

மிரட்டல் (2004)

ஏ.ஆர்.முருகதாஸுடன் மீண்டும் இணைந்தார் அஜித். ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. ஆனால், மொட்டை அடிக்க வேண்டும் என்பதால் இதிலிருந்தும் விலகினார் அஜித்.  பின் கஜினியாக மிகப்பெரிய வெற்றிபெற்றது.

நடிகர் அஜித் நடிப்பதாக போஸ்டர் உடன் அறிவிக்கப்பட்டு பின் பாதியிலே கைவிடப்பட்ட திரைப்படங்கள்.. | Ajith Dropped Movies List

விதவிதமாக Watch அணிய விரும்பும் நடிகை நயன்தாராவிற்கு பிடித்த பிராண்ட் வாட்ச் எது தெரியுமா?- இத்தனை கோடியா?






+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US