கே.ஜி.எப் 3யில் அஜித்!! ரசிகர்களுக்கு காத்திருக்கும் முரட்டு சம்பவம்
கே.ஜி.எப்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித் கே.ஜி.எப் 3யில் இணையப்போவதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கன்னடத்தில் யாஷ் நடித்து வெளிவந்த திரைப்படம் கே.ஜி.எப். இப்படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் உலகளவில் மாபெரும் வசூல் வேட்டையாடி சாதனை படைத்தது.
இந்திய சினிமா பாக்ஸ் ஆபிஸில் டாப் 10 இடத்தில் கே.ஜி.எப் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இந்த நிலையில், கே.ஜி.எப் 2 படத்தை தொடர்ந்து கே.ஜி.எப் 3 எப்போது என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள். அதற்கான வேலைகள் நடந்து வருவதாக பிரஷாந்த் நீல் கூறியிருந்தார்.
கே.ஜி.எப் யுனிவெர்சில் அஜித்
இந்த சூழலில் கே.ஜி.எப் 3-யில் அஜித் இணையப்போவதாக வந்துள்ள செய்தி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அப்டேட்டாக மாறியுள்ளார். இயக்குனர் பிரஷாந்த் நீல் உடன் இணைந்து இரண்டு படங்கள் பணிபுரியவுள்ளாராம் அஜித். அதற்கான பேச்சு வார்த்தையும் நடந்து வருகிறதாம்.
இதில் இவர்கள் இருவரும் இணைந்து முதல் படம் அஜித்தின் கதாபாத்திரத்தை மட்டுமே மையப்படுத்தி இருக்குமாம். இரண்டாவது திரைப்படத்தில் கே.ஜி.எப் 3 படத்திற்காக விஷயங்கள் உள்ளே வரும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பிரஷாந்த் நீல் - அஜித் கூட்டணியில் உருவாகும் இந்த இரண்டாவது படத்திற்கான கிளைமாக்ஸ் காட்சி கே.ஜி.எப் 3 படத்திற்கான துவக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதன்மூலம் கே.ஜி.எப் யுனிவெர்சில் அஜித் இணைந்துள்ளார் என பேசப்படுகிறது.
ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்போ இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
