திடீரென விலகிய விடாமுயற்சி.. அதிர்ச்சியில் ரசிகர் வெளியிட்ட கடிதம்
விடாமுயற்சி
வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடாமுயற்சி திரைப்படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரிலீஸ் ஆகவில்லை என படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
புத்தாண்டு அன்று விடாமுயற்சி ட்ரைலரை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு, விடாமுயற்சி பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவில்லை என அறிவிப்பு வெளிவந்தவுடன் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
கடந்த ஆண்டே இப்படம் வெளிவரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். இறுதிக்கட்ட பணிகள், மீதம் இருந்த படப்பிடிப்பு காரணமாக பொங்கலுக்கு வெளிவரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது பொங்கலுக்கு விடாமுயற்சி வெளிவரவில்லை என்பது அஜித் ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது.
ரசிகன் கடிதம்
இந்த நிலையில், அஜித்தின் ரசிகர் ஒருவர் எக்ஸ் தளத்தில் வருத்தத்துடன் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், நடிகர் அஜித்தை கடுமையாக சாடியுள்ளார். மேலும் இனிமேல் நான் அஜித்தின் ரசிகன் அல்ல என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு..
நன்றி #அஜித்குமார்..
— Ashokan Lee (@AsAshokan) December 31, 2024
ஒரு ரசிகனின் குறைந்த பட்ச ஆசையை கூட நிறைவேத்த முடியலனா எதுக்குயா படம் நடிக்குற..
இதுல unconditonal love வேற..
புது வருடம் அதுமா இப்படி ஒரு அறிக்கை விட்டா ரசிகன் மனநிலை எப்படி இருக்கும்னு யோசிக்காம உன் இஷ்டத்துக்கு பண்றியே போயா பூமர்.. pic.twitter.com/lkArq7701J