மீண்டும் அஜித்திற்கு நடக்கப்போகும் அறுவை சிகிச்சை.. ஒரு வருடன் ஓய்வு! ஷாக்கிங் செய்தி

By Kathick Jul 31, 2024 10:30 AM GMT
Report

அஜித் 

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித் கடந்த மார்ச் மாதம் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை நடந்ததாக தகவல் வெளிவந்து அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

மீண்டும் அஜித்திற்கு நடக்கப்போகும் அறுவை சிகிச்சை.. ஒரு வருடன் ஓய்வு! ஷாக்கிங் செய்தி | Ajith Going To Do Surgery Again

அவருடைய மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாக இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது என தகவல்கள் வெளியானது. இதன்பின் அவர் நலமாக இருக்கிறார், படப்பிடிப்பிலும் கலந்துகொண்டார் என்றும் தெரியவந்தது.

மீண்டும் அறுவை சிகிச்சை

இந்த நிலையில், தற்போது அஜித் கைவசம் இரண்டு திரைப்படங்கள் உள்ள நிலையில், விடாமுயற்சி முடித்தபின் குட் பேட் அக்லி படத்தையும் கையோடு முடித்துவிட்டு, மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய தயாராகியுள்ளாராம் அஜித்.

கடந்த மார்ச் மாதம் நடந்து அறுவை சிகிச்சையின் தொடர்ச்சியாக தான், இதுவும் நடக்கப்போவதாக கூறுகின்றனர். மார்ச் மாதம் நடந்த அறுவை சிகிச்சை அப்போதைய சூழ்நிலைக்கு சரிசெய்துள்ளனர். ஆனால் அது முழுமையாக குணமடைய வேண்டும் என்றால் இந்த அறுவை சிகிச்சையையும் மேற்கொள்ள வேண்டுமாம்.

மீண்டும் அஜித்திற்கு நடக்கப்போகும் அறுவை சிகிச்சை.. ஒரு வருடன் ஓய்வு! ஷாக்கிங் செய்தி | Ajith Going To Do Surgery Again

சர்தார் 2 திரைப்படத்தில் மூன்று நடிகைகள்.. யார்யாரெல்லாம் தெரியுமா, இதோ

சர்தார் 2 திரைப்படத்தில் மூன்று நடிகைகள்.. யார்யாரெல்லாம் தெரியுமா, இதோ

ஆகையால் அஜித் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, இந்த அறுவை சிகிச்சையை செய்ய முடிவு செய்துள்ளாராம். இந்த அறுவை சிகிச்சை செய்தபின் ஒரு வருடம் ஓய்வு எடுக்கப்போகிறாராம் அஜித். அதனால் அவர் படங்களில் நடிக்கமாட்டார் என கூறப்படுகிறது.

இந்த தகவலை மூத்த பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US