உலகளவில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் செய்துள்ள மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா?
குட் பேட் அக்லி
அஜித்தின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்துள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. ஒரு கேங்ஸ்டரின் கதையை மையப்படுத்தி கலகலப்பு, விறுவிறுப்பின் உச்சமாக ஒளிபரப்பாகிய இந்த படம் பெரிய ஹிட் படமாக அமைந்துவிட்டது.
அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவான இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
கடந்த ஏப்ரல் 10ம் தேதி வெளியான இப்படம் இந்த வருடத்தின் ஹிட் படங்களில் வரிசையில் இடம்பெற்றுள்ளது.
கலவையான விமர்சனத்தை குட் பேட் அக்லி திரைப்படம் பெற்றாலும், முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
மொத்த வசூல்
இந்நிலையில், இப்படம் 20 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, குட் பேட் அக்லி 20 நாட்களில், உலகளவில் ரூ. 282 கோடி வசூல் செய்துள்ளது.