அஜித்தின் குட் பேட் அக்லி படத்தை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி... இனி சரவெடி தான்
குட் பேட் அக்லி
நடிகர் அஜித்தின் 63வது படமாக உருவாகி இருந்தது குட் பேட் அக்லி திரைப்படம்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்துடன் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், ப்ரியா வாரியர் சிறப்பு வேடத்தில் சிம்ரன் என பலர் நடித்திருந்தனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வந்திருந்தது.
இதற்கு முன் அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி சரியான வரவேற்பு பெறவில்லை, இதனால் எதிர்ப்பார்ப்புடன் வெளியான குட் பேட் அக்லி அவருக்கு தரமான கம்பேக் கொடுத்தது.
ஒத்த ரூபாய் தாரேன், தொட்டு தொட்டு பேசும் சுல்தானா போன்ற பாடல்கள் செம டிரெண்ட் ஆனது.
பட ரைட்ஸ்
குட் பேட் அக்லி படம் தாறுமாறாக ஓட இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை யார் பெறுவார் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகம் இருந்தது.
தற்போது என்ன தகவல் என்றால் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விஜய் டிவி கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஸ்பெஷல் என்னவென்றால் விஜய் டிவி கைப்பற்றும் முதல் அஜித் படம் இதுதானாம்.
படம் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது.

இந்தியாவில் நிற்கும் F-35B போர் விமானத்தை செயற்கைகோள் மூலம் கண்காணித்துவரும் பிரித்தானிய ராணுவம் News Lankasri
