சண்டையுடன் துவங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு.. லேட்டஸ்ட் அப்டேட்
குட் பேட் அக்லி
விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது வரை துவங்கவில்லை. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அஜித் தனது அடுத்த படம் அதாவது குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பை துவங்கிவிட்டாராம். ஆம், ஹைதராபாத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
படப்பிடிப்பு
அதுவும் சண்டை காட்சிகளுடன் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ள நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பு ஜூன் 6ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
கண்டிப்பாக ஆதிக் ரவிச்சந்திரனிடம் இருந்து 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெறித்தனமான திரைப்படம் வெளியாகும் என அஜித் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா, அரசியல் என கெத்தாக கலக்கும் நடிகை கங்கனா ரனாவத்தின் சொத்து மதிப்பு.... அவரே வெளியிட்ட விவரம்
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் குட் பேட் அக்லி என மட்டுமே இதுவரை தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இப்படத்தில் கதாநாயகியாக யார் நடிக்கிறார், மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கப்போவது யார்யார் என்பது குறித்து இதுவரை தகவல்கள் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
