குட் பேட் அக்லி ரிலீஸ் எப்போது.. உறுதியாக வெளிவந்த தகவல்
குட் பேட் அக்லி
விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என அஜித்தின் நடிப்பில் தற்போது இரண்டு படங்கள் உருவாகி வருகிறது. இதில் எந்த படம் முதலில் வெளியாகப்போகிறது என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

இந்த இரு படங்களில் குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் 2025 பொங்கலுக்கு என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர். ஆனால், சில வாரங்களுக்கு முன் வெளிவந்த தகவலில், குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகிறது.
ரிலீஸ் எப்போது
அடுத்த ஆண்டு மே மாதம் அஜித்தின் பிறந்தநாள் அன்று குட் பேட் அக்லி வெளியாகும் என திரை வட்டாரத்தில் பேசி வந்தனர். இந்த நிலையில், தற்போது வெளிவந்துள்ள தகவல் என்னவென்றால், குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு இன்னும் 7 நாட்கள் தான் மீதமுள்ளதாம்.
மேலும் படத்தின் முதல் பாகத்திற்கான டப்பிங் வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். இதனால், படப்பிடிப்பு முடிந்துவிடும், இறுதிக்கட்ட பணிகள் துவங்கிவிடும்.

கண்டிப்பாக குட் பேட் அக்லி படம் 2025 பொங்கலுக்கு வெளிவருவது உறுதி என சொல்லப்படுகிறது. இந்த தகவலை பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Bigg Boss: இரண்டாவது எவிக்ஷனில் இன்று வெளியேறுவது யார்? எவிக்ஷன் கார்டை காட்டிய விஜய் சேதுபதி Manithan
அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் உயிரிழப்பு, பலர் காயம் News Lankasri