அஜித் ரசிகர்களே தயாரா, பொங்கல் ஸ்பெஷலாக குட் பேட் அக்லி... எந்த தொலைக்காட்சி, எப்போது தெரியுமா?
விஜய்
தமிழ் சினிமாவில் ரஜினி-கமலுக்கு பிறகு முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் தான் விஜய்-அஜித்.
ஒரு காலத்தில் இவர்களின் ரசிகர்களின் சண்டை தான் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வந்தது, ஆனால் இப்போது அவரவர் நாயகனை கொண்டாடுவதை மட்டும் செய்து வருகிறார்கள்.
நாளை (ஜனவரி 9) தமிழ் சினிமா மிகவும் எதிர்ப்பார்த்த விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகன் ரிலீஸ் ஆக இருந்தது, ஆனால் தணிக்கை குழ சான்றிதழ் கிடைக்காததால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

படத்தை காணும் ஆர்வத்தில் ரசிகர்கள் படத்திற்கு டிக்கெட் புக்கிங் செய்ததில் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 65 கோடி வசூலித்திருந்ததாக கூறப்படுகிறது. இப்போது படம் ரிலீஸ் ஆகவில்லை, ரசிகர்களும் கடும் வருத்தத்தில் உள்ளனர்.
அஜித்
இந்த நேரத்தில் அஜித் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் ஒரு சூப்பரான தகவல் வந்துள்ளது. அதாவது கடந்த வருடம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த குட் பேட் அக்லி படம் பொங்கலுக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாம்.

சன் தொலைக்காட்சியில் வரும் ஜனவரி 15ம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக மாலை 6.30 மணிக்கு படம் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு சூப்பர் கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.