அஜித்தின் பங்கேற்புடன் பிரம்மாண்டமாக நடக்கவுள்ள துணிவு படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி !
அஜித்
நடிகர் அஜித் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் துணிவு.
பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ள துணிவு திரைப்படத்துடன் நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படமும் வெளியாக இருக்கிறது.
மேலும் இப்படத்தின் டப்பிங் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று அப்படத்தின் நடிகை மஞ்சு வாரியர் துணிவு பட டப்பிங் பணியின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.

துணிவு
இந்நிலையில் தற்போது துணிவு திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகர் அஜித் கலந்து கொள்ள பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்படி அவர் கலந்து கொண்டால் பிரம்மாண்ட துணிவு திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என சொல்லப்படுகிறது.

கார்த்தியின் சர்தார் மொத்தமாக இதுவரை செய்துள்ள மொத்த வசூல்