சூர்யாவால் அஜித்தின் வாழ்க்கை மாறியதா.. இதுதான் காரணம்
நடிகர் அஜித்
அஜித் தமிழ் சினிமாவில் எவ்வளவு பெரிய நடிகர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இவருடைய படம் வெளிவரும் நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
விடாமுயற்சி படத்தில் தற்போது பிசியாக நடித்து வரும் அஜித், அதற்கு அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
அஜித் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று ஆசை. பிரபல இயக்குனர் வசந்த் இப்படத்தை இயக்கியிருந்தார்.
வேண்டாம் என கூறிய சூர்யா
இந்நிலையில், முதன் முதலில் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கவிருந்தது அஜித் கிடையாதாம். சூர்யா தான் ஹீரோவாக நடிக்கவிருந்தாராம். அதுவும் அவருடைய அறிமுக திரைப்படமாக இது அமைந்திருக்குமாம்.
ஆனால், அவர் அப்போது ஆசை படத்தில் நடிக்க விருப்பம் காட்டவில்லை. அதன்பின் அஜித்தை வைத்து இயக்க முடிவு செய்து ஆசை படத்தை எடுத்துள்ளார். இதை இயக்குனர் வசந்த் பேட்டி ஒன்றில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பானியை அடுத்து... ஆசியாவின் இரண்டாவது பெரும் கோடீஸ்வர குடும்பம்: அவர்களின் சொத்து மதிப்பு News Lankasri
