அஜித்துடன் இணையும் இரண்டு முன்னணி ஹீரோக்கள்.. AK 64 படத்தின் மாஸ் அப்டேட்
AK 64
குட் பேட் அக்லி படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து AK 64 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். அஜித் - ஆதிக் கூட்டணியில் உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும், படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். மேலும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்திற்காக நடிகர் அஜித் ரூ. 183 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
விஜய் சேதுபதி - ராகவா லாரன்ஸ்
இந்த நிலையில், AK 64 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகிய இருவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.

இவர்கள் இருவரில் ஒருவர் அந்த ரோலில் நடிக்க அதிக வாய்ப்பு என்கின்றனர். மேலும் இது வில்லன் கதாபாத்திரமா அல்லது வேறு ஏதேனும் முக்கிய வேடமா என தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம் இதுகுறித்து எப்போது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகிறது என்று.
    
    Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan