குட் பேட் அக்லி படத்தின் கேரளா ரைட்ஸ்.. இத்தனை கோடிக்கு வியாபாரம் செய்கிறார்களா
குட் பேட் அக்லி
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. மைத்திரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
மேலும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். விடாமுயற்சி தொடர்ந்து மீண்டும் இப்படத்தில் அஜித் - த்ரிஷா இருவரும் இணைந்துள்ளனர். மேலும் சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரியா வாரியர் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளிவந்து Youtube மாபெரும் சாதனை படைத்துள்ளது. இந்த டீசர் வெளியான பின் இப்படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.
கேரளா ரைட்ஸ்
இந்த நிலையில், குட் பேட் அக்லி திரைப்படம் கேரளா ரைட்ஸ் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் கேரளா ரைட்ஸை ரூ. 5 கோடி முதல் ரூ. 6 கோடி வரை கொடுத்து வாங்க போட்டி நடந்து வருகிறதாம்.
இறுதி வியாபாரம் இந்த தொகையை விட அதிகமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இதற்கு முன் விவேகம் திரைப்படம்தான் அதிக விலைக்கு கேரளாவில் விற்பனை ஆனது. ரூ. 4 கோடி கொடுத்த கேரளாவில் வாங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

எனக்கு முன்னாடி 4 பேர்; இந்த வேலைக்கு பேர் என்ன? - நடிகை விஜயலட்சுமிக்கு சீமான் பதிலடி IBC Tamilnadu
