பிரசாந்த் நீலுடன் அஜித் குமார் சந்தித்தது உண்மைதான், ஆனால்.. சுரேஷ் சந்திரா சொன்ன தகவல்!!
அஜித்
விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி போன்ற படங்களில் நடித்து வருகிறார். தற்போது விடாமுயற்சி ஷூட்டிங் முடிந்த நிலையில் அவர் அஜர்பைஜானில் இருந்து கிளம்பி சென்னைக்கு வந்தடைந்துள்ளார்.
அவர் காரில் வீட்டுக்கு செல்லும் புகைப்படங்களும்,வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், குட் பேட் அக்லி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் தகவல்!!
அண்மையில் கே.ஜி.எஃப் படத்தில் நடிக்க வைக்க அஜித்தை அணுகியதாகவும், அதற்கு அஜித் தரப்பில் இருந்து ஒப்புக்கொண்டதாகவும் கூறப்பட்டது.
மேலும் கே.ஜி.எஃப் படம் முடிந்த பிறகு தல அஜித்தை வைத்து பிரசாந்த் நீல் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் இணையத்தில் உலா வந்தது.
இந்நிலையில் அஜித் குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா இது குறித்து பேசியுள்ளார். அதில் அவர், பிரசாந்த் நீலுடன் அஜித் குமார் சந்தித்தது உண்மை தான் ஆனால் அது திரைப்படம் தொடர்பானது என்பது தெரியாது என்று கூறியுள்ளார்.

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
