மொட்டை அடித்து ஆளே மாறிய அஜித்.. வெளிவந்த லேட்டஸ்ட் லுக் வீடியோ இதோ
அஜித்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் அஜித். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
உலகளவில் ரூ. 285 கோடி வசூல் செய்து, அஜித்தின் கரியர் பெஸ்ட் திரைப்படமாக மாறியுள்ளது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து AK 64 படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன்தான் இயக்கவுள்ளார். விரைவில் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரும் என கூறப்படுகிறது.
மேலும் இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் அஜித் ரூ. 180 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. சினிமா ஒரு பக்கம் கார் ரேஸிங் மறுபக்கம் என இரண்டிலும் கலக்கிக்கொண்டிருக்கிறார் அஜித்.
ஆளே மாறிய அஜித்
இந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் கார் ரேஸில் பங்கேற்க தயாராகி வரும் அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ வெளியாகியுள்ளது. GT4 European series-ல் 3rd round கலந்துகொள்வதற்காக அஜித் தயாராகி வருகிறார். இந்த ரேஸில் பங்குகொள்ளவிருக்கும் அஜித், தனது தலையை மொட்டை அடித்து ஆளே மாறியுள்ளார்.
இந்த கெட்டப்பில் பார்க்க ரெட் மற்றும் வேதாளம் கணேஷ் போல் அஜித் உள்ளார் என ரசிகர்கள் கமன்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ பாருங்க..

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

வெளிநாட்டில் கேரள பெண் குழந்தையுடன் மரணம்! அழகாக இருந்ததால் மொட்டை..தாய் பரபரப்பு குற்றச்சாட்டு News Lankasri
