கார் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்.. பதைபதைக்கும் வீடியோ காட்சி..
அஜித்
நடிகர் அஜித் சினிமாவை தாண்டி கார் ரேஸில் அதிகம் ஆர்வம் கொண்ட நபர் என்பதை நாம் அறிவோம். சினிமாவிற்காகவும், தனது ரசிகர்களுக்காகவும் சில ஆண்டுகள் கார் ரேஸில் இருந்து விலகி இருந்தார்.
ஆனால், தற்போது மீண்டும் அதில் களமிறங்கியுள்ள அஜித், முதல் போட்டியிலேயே மூன்றவது இடத்தை பிடித்து வெற்றிபெற்றார். அதை கொண்டாடிய வீடியோ கூட இணையத்தில் வைரலானது. அதை தொடர்ந்து பல கார் ரேஸில் போட்டியிட்டு வருகிறார்.
கார் விபத்து
இந்த நிலையில், தற்போது ஐரோப்பியன் கார் பந்தயத்தில் அஜித் கலந்கலந்துகொள்ளவுள்ளார். அதற்கான பயிற்சியின்போது, எதிர்பாராத விதமாக அஜித்தின் கார் விபத்தில் சிக்கியுள்ளது.
ஆனால், பெரிய காயங்கள் எதுவும் இல்லாமல் அஜித் தப்பித்துள்ளார். தற்போது நலமாக இருக்கிறாராம்.அஜித்தின் கார் விபத்தில் சிக்கிய வீடியோ காட்சி தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
பதைபதைக்கும் வீடியோ காட்சி இதோ..
ஐரோப்பியன் கார் பந்தயத்தில் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்குமார்
— Niranjan kumar (@niranjan2428) April 19, 2025
நல்வாய்ப்பாய் காயம் எதுவும் ஏற்படாமல் தப்பினார்#AjithKumarRacing #GoodBadUgly pic.twitter.com/Jk5hWf81sp
இன்று நடைப்பெறவிருக்கும் கார் பந்தயத்தில் தனது குழுவுடன் அஜித் கலந்துகொள்ள விருக்கிறார். 12 மணி நேரம் நடைபெறும் இந்த கார் பந்தயத்தில் அஜித் உட்பட 3 ஓட்டுனர்கள் மாறி மாறி காரை இயக்குவார்கள்.