அஜித் தவறவிட்ட அந்த திரைப்படம்.. கடைசியில் சூர்யா நடித்து மாஸ் ஹிட் ஆனாது
அஜித் குமார்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் அஜித் குமார். இவர் வெற்றி படங்களை காட்டிலும் அதிக தோல்வி படங்களை கொடுத்து இருக்கிறார். இருப்பினும் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
தற்போது இவர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
சூப்பர் ஹிட் படம்
கடந்த 2001 -ம் ஆண்டு சூர்யா நடிப்பில் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த நந்தா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் சூர்யாவின் கேரியரில் முக்கியமான படமாக அமைந்தது.
இந்த படத்தில் முதல் முதலாக நடிக்கவிருந்தது பிரபல நடிகர் அஜித் குமார். ஆனால் சில காரணத்தால் அவரால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.