அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் வில்லன் ரோலில் நடிக்கப்போவது இவரா?.. அதிரடி சம்பவம்
குட் பேட் அக்லி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் குமார் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவரவிருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளனர். விடாமுயற்சி படத்தை தொடர்ந்து இப்படத்திலும் நடிகை த்ரிஷா கதாநாயகியாக அஜித்துடன் நடித்துள்ளார்.

மேலும் சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, இரண்டு தினங்களுக்கு முன் இந்த படத்தின் முதல் பாடலான ஓ.ஜி. சம்வம் வெளியானது.
இவரா?
குட் பேட் அக்லி படத்தில் வில்லன் கதாபத்திரத்தில் யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில், நடிகர் ரகுராம் தான் குட் பேட் அக்லி படத்தில் வில்லன் ரோலில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
ரகுராம் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தில் வில்லன் கும்பலைச் சேர்ந்த இரட்டையர்களில் ஒருவராக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan