AK 64 படத்திற்காக சம்பளம் வாங்காமல் நடிக்கும் அஜித் குமார்.. ஏகேவின் புது டீல்!
அஜித்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.
இதை தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க அஜித் முடிவு செய்துள்ளார். இப்படத்தை பிரபல விநியோகஸ்தரான ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.
புது டீல்!
இந்நிலையில், அஜித்தின் அடுத்த படமான AK64 படத்திற்காக அவர் சம்பளம் வாங்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, ராகுல் அஜித்திடம் ஒரு செம டீல் போட்டிருக்கிறாராம். அதன்படி, இப்படத்தில் நடிக்க அஜித்துக்கு சம்பளம் தராமல், இதன் OTT மற்றும் டிஜிட்டல் உரிமையை விற்பனை செய்வதன் மூலம் வரும் தொகை முழுவதையும் அஜித்துக்கே வழங்க முடிவெடுத்துள்ளாராம்.