'Racing Isn’t Acting'.. ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள அஜித் குமார் ரேஸிங் படம்.. டிரைலர் இதோ
அஜித் குமார் ரேஸிங்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் தற்போது கார் ரேசிங்கில் பிசியாக உள்ளார். தன் மனதிற்கு நெருக்கமான கார் ரேஸில் தொடர்ந்து ஒவ்வொரு நாடுகளாக பயணித்து அதில் பங்கேற்ற வெற்றிபெற்று வருகிறார்.

தன்னுடைய வெற்றியின் மூலம் இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்து வருகிறார். மேலும், 2025ஆம் ஆண்டுக்கான ஜென்டில்மேன் டிரைவர் என்கிற விருது அஜித்துக்கு சமீபத்தில் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைலர்
இந்த நிலையில், அஜித் குமாரின் கார் ரேஸிங் வாழ்க்கையை ஆவணப்படமாக உருவாக்கியுள்ளனர். அந்த ஆவணப்படத்திற்கான டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் ரேஸிங் என்றால் என்ன, தான் எதற்காக இதை தேர்ந்தெடுத்தேன் மற்றும் பல விஷயங்கள் குறித்து அவர் பகிர்ந்துள்ளார். இதோ அந்த டிரைலரை நீங்களே பாருங்க: