AK 64 படத்திற்காக அஜித் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா! என்னது இத்தனை கோடியா
அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தை அஜித்தின் தீவிர ரசிகரும், இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார்.

AK 64
பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வெளிவந்த இப்படம் உலகளவில் ரூ. 285 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. மேலும் அஜித்தின் கரியர் பெஸ்ட் படமாகவும் GBU மாறியுள்ளது. இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்தான் அஜித் நடிக்கவுள்ளார்.

ஆம், AK 64 படத்தை ஆதிக் இயக்க பிரபல முன்னணி தயாரிப்பாளரான ஐசரி கே கணேஷ்தான் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். இதற்கான பேச்சு வார்த்தை முடிந்த இந்த மாதம் இறுதியில் சம்பளம் அட்வான்ஸ் தரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித் சம்பளம்
இந்த நிலையில், AK 64 திரைப்படத்திற்காக நடிகர் அஜித் ரூ. 180 கோடி சம்பளம் வாங்கவுள்ளாராம். தனது கடைசி படத்திற்காக ரூ. 163 கோடி சம்பளம் வாங்கியிருந்த அஜித், இப்படத்திற்காக ரூ. 180 வாங்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு ரூ. 12 கோடி சம்பளம் என கூறுகின்றனர். இந்த தகவலை பிரபல மூத்த பத்திரிக்கையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தவெக வாக்குறுதியான மகளிர் இலவச பேருந்து திட்டம் செயல்பாட்டுக்கு வருமா? முதலமைச்சர் முக்கிய அறிவுறுத்தல் IBC Tamilnadu
இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் துணையாக இருப்பேன்..ஆனால் மோடி இருந்தால்தான் - ட்ரம்ப் News Lankasri