கடைசியாக நடிகர் அஜித் தனது படத்தின் வெற்றிக்காக அளித்த பிரஸ் மீட் ! ரசிகர்களிடையே வைரலான வீடியோ..

By Jeeva Jul 07, 2022 10:50 AM GMT
Report

அஜித்தின் வலிமை திரைப்படம் 

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.

அதன்படி கடைசியாக இவர் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் என்னதான் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் உலகளவில் ரூ. 200 கோடிக்கும் வசூலை குவித்து சாதனை படைத்திருந்தது.

அப்படத்தை தொடர்ந்து மீண்டும் நடிகர் அஜித் இயக்குநர் வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படமாக உருவாகி வரும் AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தின் ஷூட்டிங்கிற்கு ப்ரேக் விட்டுள்ள நடிகர் அஜித் தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

கடைசியாக நடிகர் அஜித் தனது படத்தின் வெற்றிக்காக அளித்த பிரஸ் மீட் ! ரசிகர்களிடையே வைரலான வீடியோ.. | Ajith Last Press Meet On His Movie

அஜித் கலந்து கொண்ட பிரஸ் மீட்

இந்நிலையில் அஜித் பொதுவாக அவரின் திரைப்படங்களின் ப்ரோமோஷன்-ல் கலந்து கொள்ளவதை தவிர்த்து வருபவர், அவர் அப்படி கடைசியாக அவரின் திரைப்பட நிகழ்ச்சிகாக கலந்து கொண்டது எப்போது என்றால் பில்லா திரைப்படத்தின் போது தான்.

கடந்த 2007 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் இயக்குநர் விஷ்ணு வர்தன் இயக்கத்தில் வெளியானது பில்லா, ரீமேக்காக உருவானாலும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து.

மேலும் அப்போது அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பில்லா படக்குழு பிரஸ் மீட் நடத்தியுள்ளது, அதில் கலந்து கொண்ட அஜித் பில்லா திரைப்படம் குறித்து பேசியுள்ளார். அவர் கடைசியாக தனது திரைப்படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டது அதுவே கடைசி என சொல்லப்படுகிறது.

அந்த வீடியோ தற்போது அஜித் ரசிகர்களிடையே பரவி வருகிறது. 

பொன்னியின் செல்வனில் குந்தவையாக திரிஷா.. வெளிவந்த போஸ்டர்


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US