வெளிநாட்டில் மிக விலையுயர்ந்த காருடன் அஜித் எடுத்த போட்டோ- செம வைரல்
நடிகர் அஜித் படங்களில் நடிப்பதை தாண்டி தனது கனவுகளை நோக்கி பயணம் செய்துகொண்டே இருப்பவர். அவர் ஓய்வு நேரத்தில் வீட்டில் இருக்காமல் தனக்கு பிடித்த விஷயங்களை செய்துகொண்டே இருக்கிறார்.
போட்டோ கிராபி, பிரியாணி செய்வது, தோட்டம் அமைத்தல், துப்பாக்கி சுடுதல், விமான பயிற்சி என செய்து வந்த அஜித் இப்போது பைக்கில் உலகத்தை சுற்ற வேண்டும் என்ற ஆசையோடு அதனை நோக்கி பயணம் செய்கிறார்.
தற்போது UK பக்கம் பைக்கில் பயணம் செய்து வருகிறார், அவருடன் சுப்ரஜ் என்பவரும் சென்றுள்ளார், அவர் சுற்றுலா தளத்தில் எடுக்கும் புகைப்படங்களை தனது சமுக வலைதளங்களில் பதிவிட்ட வண்ணம் இருக்கிறார்.
விலையுயர்ந்த கார்
அஜித் வெளிநாட்டில் விலையுயர்ந்த கார் Mc Laren காரின் கதவை திறந்தபடி செம போஸ் கொடுத்துள்ளார். அந்த காரின் விலை சுமார் 4.7 கோடி வரை என கூறப்படுகிறது.
இப்போது அஜித் காருடன் போஸ் கொடுத்த புகைப்படம் மட்டும் செம வைரலாகி வருகிறது.
தொகுப்பாளினி மணிமேகலையின் சொத்து மதிப்பு மட்டும் இவ்வளவா?

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
