அஜித் மேனேஜர் திடீரென வெளியிட்ட அறிக்கை! யாருக்காக இப்படி சொன்னார் அஜித்?
நடிகர் அஜித்துக்கு தமிழ் நாட்டில் எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. அவரது படங்களை வந்தால் தியேட்டர்களில் திருவிழா போல கொண்டாடுவார்கள்.
சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து நடக்கும் ரசிகர்கள் சண்டை பற்றி அவர்களுக்கு அட்வைஸ் கூறும் வகையில் அஜித் அவரது படங்களிலேயே வசனங்கள் வைத்திருப்பார். மேலும் அடிக்கடி அவரது மேனேஜர் மூலமாகவும் அறிக்கை வெளியிட்டு வருகிறார் அஜித்.
தன்னை யாரும் இனி தல என குறிப்பிட வேண்டாம் என இதற்கு முன்பு அறிக்கை வெளியிட்டார் அஜித். இந்நிலையில் இன்று அஜித் மேனேஜர் சுரேஷ் சந்திரா ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
ஒரு கணவன் மனைவி ஜோடி கழுதையை வைத்து எது செய்தாலும் அதை பார்பவர்கள் எதாவது ஒரு கருத்து கூறிக்கொண்டே இருப்பார்கள். நான் எது செய்தாலும் உலகம் பேசிக்கொண்டே தான் இருக்கும், எல்லோரையும் நம்மால் திருப்தி படுத்த முடியாது என்ற கருத்தை அந்த புகைப்படத்தில் குறிப்பிட்டு உள்ளனர்.
To whom so ever it may concern!
— Suresh Chandra (@SureshChandraa) May 30, 2022
Unconditional love.
Ajith pic.twitter.com/v6c4cmB4f7
"To whom so ever it may concern! Unconditional love - Ajith" என குறிப்பிட்டு இருக்கிறார் சுரேஷ் சந்திரா. அதனால் அஜித் யாருக்காக இப்படி ஒரு கருத்தை கூறினார் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
அஜித் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணி சேர்கிறார்கள் என்கிற தகவல் வந்ததில் இருந்து அஜித் ரசிகர்களே வேண்டவே வேண்டாம் என கூறி வருகின்றனர். அதற்காக தான் இப்படி ஒரு கருத்தை அஜித் கூறினாரா என பலரும் விவாதம் நடத்தி வருகின்றனர்.