அஜித்தை நேரில் பார்த்ததும் பதற்றத்துடன் கண்கலங்கிய ரசிகர்.. அஜித் என்ன செய்தார் பாருங்க
அஜித்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் அஜித் நடிப்பில் இந்த ஆண்டு விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் வெளிவந்தது. இதில் குட் பேட் அக்லி மாபெரும் வசூல் சாதனை படைத்து, அஜித்தின் கரியர் பெஸ்ட் படமாக மாறியுள்ளது.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்க முடிவு செய்து, AK 64 படத்தையும் அவருக்கே கொடுத்துள்ளார். இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளிவரவிருக்கும் நிலையில், படத்தின் முன் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதை படத்தின் இயக்குநர் ஆதிக் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார்.
கண்கலங்கிய ரசிகர்
அஜித்தை நேரில் பார்க்க வேண்டும் என்பது பல லட்சம் ரசிகர்களின் கனவாக இருக்கும். நாம் ரசிக்கும் ஒவ்வொரு பிரபலங்களையும் நேரில் பார்க்கும்போது கண்டிப்பாக நம்மையே அறியாமல், ஒரு ஆனந்தம் வரும்.
இந்த நிலையில், கார் ரேஸில் பிசியாக இருக்கும் நடிகர் அஜித்தை, அவருடைய தீவிர ரசிகர் ஒருவர் நேரில் சந்தித்துள்ளார். அப்போது அவரை பார்த்தவுடன் பதற்றத்துடன் அந்த ரசிகர் கண்கலங்கினார். ரசிகர் பதற்றப்படுகிறார் என்று தெரிந்தவுடன், முதலில் ரிலாக்ஸ் பண்ணுங்க என அஜித் கூறுகிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ:

siragadikka aasai: படுமோசமான முத்து.. யாரும் எதிர்பார்க்காத திருப்பம்- பேரானந்தத்தில் விஜயா Manithan
