லியோ படத்தில் இணைந்த அஜித் பட நடிகை.. வைரலாகும் புகைப்படம்
லியோ
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. இப்படத்திற்கு ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இப்படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் தீவீரமாக நடந்து வருகிறது. சமீபத்தில் லியோ ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
பிக் பாஸ் பிரபலம்
லியோ படத்தில் த்ரிஷா, அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், கவுதம் மேனன், மேத்யூ தாமஸ், பிரியா ஆனந்த், சஞ்சய் தத் போன்ற பல பிரபலங்கள் நடிக்கவுள்ளதாக படகுழுவினர் அறிவித்தனர். இந்நிலையில் பிக் பாஸ் பிரபலம் அபிராமி லியோ படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அபிராமி லோகேஷ் கனகராஜுடன் காஷ்மீரில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
2019 -ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான 'நேர்கொண்ட பார்வை' படத்தில் அபிராமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது
கிளாமருக்கு மாறிய நடிகை ப்ரியாங்கா மோகன்- இணையத்தை பற்ற வைத்த போட்டோஷுட்

ஜெலென்ஸ்கியை நாட்டை விட்டே துரத்த ட்ரம்ப் திட்டம்: போர் வெற்றியை அறிவிக்கவிருக்கும் ரஷ்யா News Lankasri
