விக்னேஷ் சிவனை தொடர்ந்து AK-வின் அடுத்த திரைப்படத்தை இயக்க போவது இவர்கள் தான் !
அஜித்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் விரைவில் அவரின் 61-வது திரைப்படமான AK61-ல் இணையவுள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த அப்படத்தை அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
இதற்கிடையே அவரின் AK61 திரைப்படம் முடியும் முன்பே அவரின் 62-வது திரைப்படம் குறித்த வெளியாகி இருந்தது. அதன்படி அப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாகவும் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தனர்.

அஜித்தின் அடுத்த இயக்குநர்கள்
மேலும் தற்போது விக்னேஷ் சிவனிற்கு அடுத்து அஜித் திரைப்படத்தை இயக்கவுள்ள இயக்குநர் குறித்து இணையத்தில் தகவல் பரவி வருகிறது. ஆம், இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி தான் அஜித்தின் அடுத்த படத்திற்காக கதை எழுதி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் இவர்கள் இயக்கத்தில் வெளியான சுழல் சீரிஸ் பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் விக்ரம் வேதா திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கும் விரைவில் வெளியாக இருக்கிறது.
இதற்கிடையே தங்களின் அடுத்த திரைப்படத்தில் அவர்கள் கவனம் செலுத்தி வருவதாகவும் அதற்காக தான் அவர்கள் நடிகர் அஜித்தின் திரைப்படத்திற்கு கதை எழுதி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

நடிகர் அஜித்தே தொலைப்பேசியில் அழைத்து தனது திரைப்படத்தை இயக்கும்படி கேட்ட இயக்குநர்