நல்ல பெயர் வரலனா பரவாயில்லை, கெட்ட பெயர் வர வச்சுடாதீங்க- அஜித் வெளிப்படையான பேச்சு

By Kathick Oct 14, 2025 07:30 AM GMT
Report

அஜித் 

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித் குமார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

நல்ல பெயர் வரலனா பரவாயில்லை, கெட்ட பெயர் வர வச்சுடாதீங்க- அஜித் வெளிப்படையான பேச்சு | Ajith Old Audio About His Fans Goes Viral On Net

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்து பணியாற்ற அஜித் முடிவு செய்துள்ளார். ஆம், AK 64 படத்தை ஆதிக் இயக்க ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கும் என்பதுபோல் தகவல் வெளியாகியுள்ளது.

தர்ஷனால் பார்கவிக்கு பிரச்சனையா, கோபத்தில் ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

தர்ஷனால் பார்கவிக்கு பிரச்சனையா, கோபத்தில் ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

வைரலாகும் ஆடியோ

நடிகர் அஜித் கார் ரேஸ் மீது அளவுகடந்த அன்பை கொண்ட நபர் ஆவார். தற்போது முழுமையாக கார் ரேஸில் ஈடுபட்டு வரும் அஜித், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கலந்துகொண்ட கார் ரேஸில், பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில், தனது கார் ரேஸை பார்க்க ஆயிரக்கணக்கானோர் கூடியபோது, ரசிகர்களை அவர் அப்படி ஒழுங்குபடுத்தினார் என்பதை பாருங்க.

நல்ல பெயர் வரலனா பரவாயில்லை, கெட்ட பெயர் வர வச்சுடாதீங்க- அஜித் வெளிப்படையான பேச்சு | Ajith Old Audio About His Fans Goes Viral On Net

அஜித் பேசியதாவது: எனக்கு நீங்க நல்ல பெயர் வாங்கி தரவேண்டாம். அட்லீஸ்ட் கெட்ட பெயர் வராமல் இருந்தால் போதும். உங்க ஆர்வம் எனக்கு புரியாது. யு லவ் மீ சோ மச், ஐ லவ் யு டு. பட் மத்தவங்க அந்த அன்ப தப்பா புரிஞ்சிக்காம இருக்க ஒரே ஒரு வழிதான் இருக்கு. எல்லாரும் கண்ணியமா நடத்துக்கோங்க. ஒவ்வொரு பேட்டிகளிலும் என்னுடைய ரசிகர்கள் கண்ணியமானவங்கனு சொல்லிட்டு வரேன், அந்த பெயரை காப்பாத்துங்க. இது என்னுடைய அன்பான கட்டளை, ப்ளீஸ். இப்போ நிம்மதியா போய் நான் ரேஸ் ஓட்டலாமா. உங்கள நம்பலாமா. மிக்க நன்றி, லவ் யு ஆல். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US