ரூ. 9 கோடியில் அஜித் வாங்கிய புதிய கார்.. வெளிவந்த மாஸ் வீடியோ இதோ
அஜித்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித் தற்போது குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி என இரு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இதில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி இரு திரைப்படங்களின் படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் ஒரே இடத்தில் தான் நடந்து வருகிறது. இதனால் காலையில் விடாமுயற்சி படப்பிடிப்பை முடித்துவிட்டு, மாலையில் குட் பேட் அக்லி படப்பிடிப்பில் நடித்து வருகிறாராம்.
விடாமுயற்சி தீபாவளி அன்று வெளிவரும் என கூறப்பட்டு வருகிறது. அதே போல் குட் பேட் அக்லி அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித் வாங்கிய புதிய கார்
நடிகர் அஜித்திற்கு கார் மற்றும் பைக் மீது அதீத காதல் இருப்பதை நாம் அறிவோம். சமீபத்தில் தான் ரூ. 9 கோடி விலையுள்ள Ferrari காரை ஒன்று அஜித் வாங்கியிருந்தார். அதன் புகைப்படங்கள் கூட வெளிவந்து இனைந்தில் வைரலானது.
இந்த நிலையில், தற்போது அஜித் தனது Ferrari காரை வாங்கும்பொழுது எடுத்த வீடியோ மற்றும் அதனை மாஸாக ஓட்டிப்பார்க்கும் வீடியோ வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
EXCLUSIVE : THALA #AjithKumar Recent Unseen Video ??#VidaaMuyarchi #GoodBadUgly pic.twitter.com/6M0WI8Xq9q
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) August 7, 2024

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
