தோல்வி படம் கொடுத்த இயக்குனருடன் இணையும் அஜித்.. ஆனால், படத்தின் வசூல் 500 கோடியை தாண்டிவிட்டது
விடாமுயற்சி
அஜித்தின் தற்போதைய திரைப்படம் விடாமுயற்சி படப்பிடிப்பு நடந்துகொண்டு இருக்கும் போதே, அடுத்தடுத்த படங்களில் தகவல்கள் தொடர்ந்து வெளிவருகிறது.
விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், பிப்ரவரி மாதம் இறுதியில் படப்பிடிப்பு நிறைவு பெரும் என கூறப்படுகிறது. தீபாவளி பண்டிகை அல்லது அதற்கு முன்பே விடாமுயற்சி படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏகே 63 - 64
மகிழ் திருமேனியின் விடாமுயற்சி படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஏகே 63 படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான ஆபிஸ் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்துவிட்டது. ,மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு கூடிய விரைவில் வெளிவருமாம்.
ஏகே 63 படத்தின் அறிவிப்பே இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிவராத நிலையில், ஏகே 64 குறித்து வெறித்தனமான அப்டேட் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளிவந்தது. இதில் வெற்றிமாறனுடன் அஜித் கைகோர்க்க போகிறார் என்றும் அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்றும் சொல்லப்படுகிறது.
அஜித் - பிரஷாந்த் நீல்
இப்படியொரு நிலையில், ஏகே 65 படத்தின் தகவல் திடீரென வைரலாகி வருகிறது. அதாவது அஜித்தின் 65வது படத்தை இயக்கப்போவது பிரஷாந்த் நீல் என கூறி அப்டேட் வெளியாகியுள்ளது.
கே.ஜி.எப் படங்களின் மூலம் Pan இந்தியா இயக்குனராக மாறிய பிரஷாந்த் நீல் சலார் எனும் படத்தை சமீபத்தில் கொடுத்தார். இப்படம் உலகளவில் வசூல் ரீதியாக ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்து நல்ல வரவேற்பை பெற்றாலும், தமிழ் நாட்டில் படுதோல்வியடைந்தது. வசூலிலும் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தோல்வி படம் கொடுத்த இயக்குனருடன் அஜித் தனது 65வது படத்திற்காக இணையப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அஜித் ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த கூட்டணி வருங்காலத்தில் அமைகிறதா என பொறுத்திருந்து பார்ப்போம்.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
